கும்பகோணம், டிச. 23 –

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று அனைத்து கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் புகை குப்பி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுந்த விவாதம் தொடர்பாக எதிர் கட்சியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எம் பி க்கள் தற்காலிக  நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாசிச பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைப்பெற்ற பாராளுமன்ற அவை நடவடிக்கையின் போது,  பாராளுமன்ற நடவடிக்கைகளை காண வந்த பார்வையாளர்கள் சிலர் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து திடீரென தாவி வந்து, கலர் புகை குப்பிகளை வீசினார்கள்.

அச்சம்பவம் தொடர்பாக எதிர்கட்சிகளைச் சார்ந்த பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் அவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட பாராளுமன்ற இருசபை உறுப்பினர்களைச் சார்ந்த காங்கிரஸ், திமுக, விசிக, மற்றும் பல்வேறு மாநிலம் மற்றும் தேசிய கட்சிகளைச் சார்ந்த எம் பி க்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர்.

அச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, பாசிச பாஜக அரசை கண்டித்து கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அப்போராட்டத்திற்கு இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில், மாநகர தலைவர் மிஷாவுதீன், பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன், இளைஞரணி மாவட்ட தலைவர் செந்தில்நாதன், திமுக மாணவரணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநகர துணை செயலாளர் சசிகுமார், தொமுச பொறுப்பாளர் மாடாக்குடி  செல்வராஜ், மகளிர் அணி பொறுப்பாளர் சுமதி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநில துணை பொது செயலாளர் முருகன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், மாவட்டச் செயலாளர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன்,  ஒன்றிய செயலாளர் நாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநகர தலைவர் மதியழகன், மாவட்டச் செயலாளர் கண்ணையன்,  விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவளவன், மாநகரப் பொருளாளர் வீரமுத்து, மாநகராட்சி செயலாளர் ராஜ்குமார், மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் முன்னிலையில் அக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அதில் அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here