திருவள்ளூர், செப். 06 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல் நிலையம் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு அனைத்து தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கடந்த ஜனவரி 1ஆம்தேதியிலிருந்து ஜுலை1 ஆம் முடிவதற்குள் பஞ்சப் படி வழங்க தமிழக அரசு உத்திரவிட்டதாகவும், ஆனால் மின் வாரிய பணியாளர்களுக்கு வழங்க அரசின் அனுமதி பெற வேண்டும் என்று தமிழக அரசின் நிதித் துறை செயலர் கடந்த 18ஆம் தேதி கடிதம் வாயிலாக தெரிவித்து இருப்பதாகவும், இதனால் மின் வாரிய பணியாளர்களுக்கு பஞ்சப்படி வழங்குவதில் தேவையற்ற கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பஞ்சப்படியை உடனே மின் வாரிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று மின் வாரிய அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு குழு சார்பில். கண்டன ஆர்ப்பாட்டம் ஐ என் டி யு சி மாநிலத் துணைத் தலைவர் எம்பி தாமோதரன், அதிமுக தொழிற்சங்க செயலாளர் பூபாலன். சிஐடியு சங்கத் தலைவர் பாண்டியன். இன்ஜினியரிங் யூனியன் மகேஸ்வரன், இன்ஜினியரிங் யூனியன் சுகுமார் டாக்டர் அம்பேத்கர் சங்கம் சசிகுமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.