திருவாரூர், மே. 21-
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்…
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அந்த தீர்மானத்தை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்தும் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே விவசாய சங்கத்தினர் காவிரி மேலாண்மை ஆணையம் நிறைவேற்றிய தீர்மான நகலை எரித்து மத்திய மாநில அரசுக்கு எதிராகவும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்தில் காவேரி விவசாயிகள் சங்கம் சார்பில் நகல் எரிக்கும் போராட்டம் காவேரி விவசாய சஙகத்தின் மாநிலத் துணைச் செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்றது.
மேலும் திருவாரூர் மாவட்ட செயலாளர் குருசாமி, மாவட்ட துணைச் செயலாளர் முகேஷ், ஒன்றிய செயலாளர்கள் திருத்துறைப்பூண்டி பாலமுருகன், முத்துப்பேட்டை சரவணன், ஒன்றிய தலைவர் நாகராஜன், கோட்டூர் ஒன்றிய தலைவர் தெய்வமணி, ஒன்றிய செயலாளர் வீரசேகர், மன்னார்குடி ஒன்றிய தலைவர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் பஞ்சநாதன், வலங்கைமான் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.