PIC : File Copy

செய்தி சேகரிப்பு இசிஆர். பா.வினோத் கண்ணன்

அரசு பேருந்தில் பயணம் செய்த 54 வயதான அன்பழகன் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னை, செப். 12 –

சென்னை சோழிங்கநல்லூரில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்த சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 54 வயதான எலக்ட்ரிஷியன் அன்பழகன் என்பவர் மயக்கம் அடைந்தால் நடத்துநர் பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு 108 ஆம்புலன்சுக்கு தொடர்பு கொண்டு வர வைத்தார்.  விரைந்து வந்த 108 ஆம்புலன்சில் வந்தவர்கள் அன்பழகனை பரிசோதித்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அவர் பேருந்திலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தாம்பரத்தில் இருந்து திருவான்மியூர் செல்லக்கூடிய தடம் எண் 95 சென்னை மாநகரப் பேருந்தில் சென்னை பெரும்பாக்கம் பேருந்து நிலையத்தில் அன்பழகன் ஏறி திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்து பேருந்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

சென்னை திருவான்மியூர் லட்சுமி புரத்தை சேர்ந்த அன்பழகன் பெரும்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டிற்கு வந்து வீடு திரும்பியபோது பரிதாபமாக உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து நடத்துநர் ராஜேந்திரன் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அன்பழகனுக்கு முன்னதாக இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கடந்த ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

அரசு பேருந்தில் பயணித்த ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சக பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here