தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
மரம் வளர்ப்போம் மழை பெருக்குவோம் என கூறி கொண்டு ஒரு பக்கம் ஆயிரக்கணக்கான பனை விதைகள் நடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மறுபுறம் மனிதனை கண்டம் துண்டாக வெட்டி கொலை செய்வது போல நுங்குகள் காய்த்து கொத்தும் குலையுமாக உள்ள பனை மரங்களை வேரோடு வெட்டி சாய்தது துண்டு துண்டாக்கி விட்டு சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது
திருவையாறு சாலையில் திருவையாறில் இருந்து தில்லை ஸ்தானம் வழியாக திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் இருபுறமும் தேக்கு. பனை, புளிய மரம் என மரங்கள் வளர்ந்து மிக ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது.
இந்த நிலையில் சாலைகள் விரிவாக்க பணிகள் இந்த சாலையில் நடந்து வருகிறது. இதற்காக சாலை ஓரத்தில் உள்ள பனை மரங்கள் வேரோடு வெட்டி சாய்த்து சாலைகள் போடும் பணி நடைபெறுகிறது.
தற்போது நுங்கு சீசன் என்பதால் ஒவ்வொரு மரத்திலும் நுங்குகள் காய்த்து கொத்தும் குலையுமாக தொங்குகிறது. இந்த மரங்களை வேரோடு ரம்பத்தால் அறுத்து சாய்த்து துண்டு துண்டாக்கி சாலை ஓரத்தில் கிடத்தி உள்ளனர்.
வரலாறு காணாத வெப்ப அலையால் நாம் வெந்து கொண்டு இருக்கிறோம் தீ பிளம்பாக வெயில் கடுமையாக அடிக்கிறது. சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலை ஓரத்தில் உள்ள மரங்கள் வெட்டப்படுகிறது
மழை வராமல் இது போன்ற வெப்ப அலை ஏற்படுவதற்கு காரணம் மரம் போன்ற தாவரங்கள் இல்லாமல் போனதுதான் என சமூக அக்கறையுடன் பேசிய இயற்கை ஆர்வலர் ஜீவக்குமார்
மரங்கள் எல்லாம் வெட்டப்படுவது இயற்கைக்கு ஹார்ட் அட்டாக் வருவது போன்றது. அதனாலதான் வெயில் கடுமையாக அடிக்கிறது . நாங்கள் கேட்பது எல்லாம் சாலையை விரிவாக்கம் செய்யுங்கள் அதே நேரத்தில் பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும்
பனை மரங்கள் இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் பண மட்டையில் விசிறி வெள்ளம் நுங்கு பதநீர் என பல வகையிலான பொருட்களை மக்கள் பயன்பாட்டிற்கு தருபவைதான் அப்பனை மரம் என்றார். மேலும் அதனை மரங்களின் வேந்தன் எனவும் சொல்வார்கள். அப் படிப்பட்ட அப்பனை மரங்களை இதயமே இல்லாமல் வெட்டுகிறார்கள் என மனவேதனையுடன் குறிப்பிட்டார் அவர். மேலும் அம்மரங்களை வெட்டுவதற்கு முன் ஒரு மரத்தை நட்டு விட்டு வெட்டலாம் என்ற அவர், பூமியை அழிவின் விழிம்புக்கு கொண்டு செல்வதற்கு சமமாக இருக்கிறது இச்செயல் என்றார்.
முதலில் நான்கு மரங்களை நடுங்கள் அதை வளர்த்து அதன் பிறகு ஒரு மரத்தை வெட்டுங்கள். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் மரங்கள் வெட்டுவதை தவிர்க்க வேண்டும் குறிப்பாக பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும் என அப்போது அவர் அரசு மற்றும் துறைச் சார்ந்தவர்களை கேட்டுக் கொண்டார்.
இயற்கை ஆர்வலர் ஜீவக்குமார்.