அம்பத்தூர், ஆக. 18 –

ஆவடி அடுத்த அம்பத்தூர் புதூர் பானு நகரில் தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் முத்து தலைமையில் இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா கடந்த ஆக 15 ஆம் தேதி நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் முத்து தேசிய கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

அதில் சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், சோடா பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது, பேச்சுப்போட்டி, நடன போட்டி, ஓவியம் வரைதல், போன்ற பல்வேறுப் போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர் சங்கம் சார்பாக வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ராகவன் மாநில பொருளாளர் பாண்டியன் மாநில செயற்குழு உறுப்பினர் பால்ராஜ் மாநில பொருளாளர் சிவபாண்டியன் மாநில இணை செயலாளர் ராஜசேகர் மாநில துணைத்தலைவர் மதரசா மாநில துணைத்தலைவர் சங்கர் சங்க சட்ட ஆலோசகர் நவநீத பாண்டியன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here