பொன்னேரி, ஆக. 27 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள திருப்பாலைவன கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகமினை சென்னை தரமணியில் இயங்கி வரும் வி.எச்.எஸ்-எம்.ஏ. சிதம்பரம் செவிலியர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பிலும் திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கைஅமரன் ஏற்பாட்டினாலும் நடைபெற்றது.
இம்முகாமில் கண், இதயம், மார்பக பரிசோதனைகள், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறித்த பரிசோதனைகள் நடைபெற்றது.
பொது மருத்துவம், பெண்கள் மற்றும் குழந்தை மருத்துவத்துடன் இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. வி.எச்.எஸ். பல்நோக்கு மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சேவைகளை மேற்கொண்டனர். கல்லூரி துணை முதல்வர் டாக்டர். பிரேமா ஜனார்தன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ப.சேரன்மாதேவி, திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுகுணா கோபி, வார்டு உறுப்பினர்கள் நதியா அரிகிருஷ்ணன், எம்.பி.ராதாகிருஷ்ணன், முகமது அலி, ஊராட்சி செயலர் சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.