பல்லாவரம், ஜூலை. 09 –
தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர் யூனியனின் மாநிலத்துணைத் தலைவர் டாக்டர் ஆர். சிவராமன் ஏற்பாட்டில் பல்லாவரத்தில் உள்ள பாசாரி ரெஸ்ட்டாரண்ட்டில் யூனியனின் தலைமை நிர்வாகிகள் மற்றும் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனைக்கூட்டம் யூனியனின் நிறுவனத்தலைவரும் தலைவருமான டாக்டர் எம்.சிவதமிழவன் தலைமையில் நேற்றுக் காலை ( சனிக்கிழமை ) 11.30 மணியளவில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரையும் வரவேற்று மாநில துணைத்தலைவர் டாக்டர் ஆர். சிவராமன் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் சி.பி.இராஜன் கூட்டத்தின் நோக்கங்கள் மற்றும் தற்போதைய யூனியனின் செயல்பாடுகள், பொறுப்பாளர்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது போன்ற பல்வேறு பொருள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார், அதனைத் தொடர்ந்து, சிற்புரை நிகழ்த்திய தலைமை நிர்வாக இயக்குநர் லயன் டாக்டர் .பெருமாள் அவர்கள் மிக அழகாகவும், தெளிவாகவும் யூனியனின் தொடக்கம் முதல் தற்போது வரை அது சாதித்த மற்றும் பல தடைகளை கடந்து வந்து தற்போது சாதித்து நிற்கும் பிரமாண்ட வளர்ச்சிப் பற்றி எடுத்துரைத்தார். மேலும் அதற்காக அரும்பாடுபட்ட நிறுவனத் தலைவர் டாக்டர். எம். சிவதமிழவன் செயல்பாடுகளுக்காக அவருக்கு புகழராம் சூட்டினார்.
மேலும் இவ்வாலசனைக்கூட்டத்திற்கு மாநில பொருளாளர் டாக்டர் ஏ.சேகர், மாநில இணைச்செயலாளர் எஸ்.விமல்பிரசாத், துணைச்செயாலாளர் வி.ஆர்.இராஜூ, மாநில மக்கள் செய்தி தொடர்பாளர் அம்சத் இப்ராஹீம் மற்றும் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் குமார் தாயார் திருமதி மரகதம்மாள், மாநில அமைப்புச் செயலாளர் ஏ.பி.முத்துக்குமாரின் தம்பி கண்ணன், மாநில இணைச்செயலாளர் சுமதி ஜெயராமன் மூத்த சகோதரியின் மகனும் தமிழன் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளருமான ரமேஷ் மற்றும் மிகத்திறமையாகவம், சிறப்பாகவும் தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த ( கோவை ) டி.ஐ.ஜி விஜயகுமார் ஆகியோரின் மறைவிற்கு கூட்டத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, நிர்வாக சீரமைப்புக் காரணமாக சில பொறுப்பாளர்கள் மாற்றம் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவைகள் தலைமை நிர்வாகத்தின் பரிந்துரை மற்றும் கடமையின் அடிப்படையில் நடைப்பெற்று, அக்கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு நியமனங்களை தலைமை நிர்வாகம் அறிவித்தது.
அதனடிப்படையில்,.டாக்டர். பா.வாணிஸ்ரீ தேசிய ஊடகச் செயலாளராகவும், டாக்டர். ஸ்ரீவித்யா மாநில சட்ட ஆலோசகராகவும், எஸ். தங்கராஜ் தென்சென்னை மாவட்ட துணைச்செயலாளராகவும், ஏ.சி.முருகவேல் தென்சென்னை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராகவும், டாக்டர் கே.காயத்ரி தென் சென்னை மாவட்ட துணை அமைப்பாளராகவும், தூர்தர்சன் செய்தியாளர் மீனாட்சிசுந்தரம் வடசென்னை மாவட்ட துணைச்செயலாளராகவும், ஜி.அருள்பிரகாஷ் மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளராகவும், தம்பட்டம் செய்தியாசிரியர் பா.இராதாகிருஷ்ணன் திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளராகவும், செண்பகவல்லி செங்கல்பட்டு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர். இந்நிகழ்வில் புதியவர்கள் 9 நபர்களுக்கு தலைமை நிர்வாகத்தால் பொறுப்பு வழங்கப்பட்டு நியமனம் செய்து வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, வீ.எஸ்.டி.மாரிமுத்து, காளிமுத்து, டாக்டர் குருசாமி, நாஞ்சில் முருகன், போதி பாஸ்கர் உள்ளிட்ட மூத்த மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
தொடர்ந்து புதியதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் தங்கள் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும், நியமனம் செய்தமைக்காக தங்கள் நன்றியினை நிர்வாகிகள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தெரிவித்துக்கொண்டனர்.
கூட்டத்தின் நிறைவாக வெகுச்சிறப்பாக இக்கூட்டத்தை ஏற்பாடு செய்து இன்முகத்துடன் அனைவரையும் வரவேற்று வியக்கதகு இக்கூட்டத்தை சிறப்பாக நடத்தி தந்த மாநிலத் துணைத்தலவர் டாக்டர் ஆர். சிவராமனுக்கு நன்றி மற்றும் பாராட்டுத் தெரிவித்த தீர்மானங்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் தென் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட சோளிங்கநல்லூர் பகுதியில் வெகுச்சிறப்பாக செயல் பட்டு வரும் சட்டம் ஒழுங்கு செய்தியாளரை நிறுவனத்தலைவர் டாக்டர் எம்.சிவதமிழவன் வெகுவாக பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
மதியம் 1 மணிக்கு இவ்வாலோசனைக் கூட்டத்தில் மாநில பொருளாளர் டாக்டர் ஏ. சேகர் நன்றியுரை நிகழ்த்த இனிதே கூட்டம் நிறைவுப்பெற்று, பங்கேற்ற அனைவருக்கும் சுவையான உணவு பரிமாறப்பட்டது.