திருவாரூர், செப். 25 –

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் இன்று பனை திருவிழா எனும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்னாவூர் நாராயணன் பங்கேற்று கைவினை பொருள் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

பனைமர தொழிலை பாதுகாக்கவும், பனை உணவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்ந பனை திருவிழா தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வருகிறது. இதன் பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற இந்த விழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பனை ஓலையில் செய்யப்பட்ட பலவிதமான கைவினை பொருட்கள் மற்றும் உணவு வகை கண்காட்சியும் நடைபெற்றது. வெகு சிறப்பாக நடைப்பெற்ற இந்த பனை திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானவர்கள் பங்கேற்று விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here