கும்பகோணம், ஏப். 08 –

கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த மர்சூத் இவர் சென்னை மற்றும் வெளிநாடுகளில் உணவகம் நடத்தி வருகிறார், இவர் கடந்த 2013ம் ஆண்டு, சென்னை பெருங்குடியை சேர்ந்த சித்திக் அபுபக்கர் என்ற நபரிடம் சொத்து வாங்குவதற்காக ரூபாய் 2 கோடியே 05 லட்சம் வழங்கி இருந்தார், தொகை வழங்கிய பின்னரே, அந்த சொத்துக்காண உரிமையாளர் அவர் இல்லை என்பதும், அவர் அளித்த அரசு ஆவணங்களான பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் போலி என்பதும் தெரிய வந்தது.

இது குறித்து மர்சூத் சென்னை உயர்நீதிமன்றத்தில் சித்திக் அபுபக்கர் மீது வழக்கு தொடர்ந்தார். இதில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மர்சூத்திற்கு ரூபாய் ஒரு கோடியே 80 லட்சத்திற்கு 18 காசோலைகளை வழங்கி, சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க, முன்ஜாமீன் பெற்றவுடன் அவர் தலைமறைவாகி தப்பியோடி விட்டார்.

இந்நிலையில்,  சித்திக் அபுபக்கர் வழங்கிய காசோலைகள் அனைத்தும், அவர் பாங்க் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியது.  இதனையடுத்து, மர்சூத், கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அபுபக்கரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர், இதில் காசோலை மோசடி செய்த அபுபக்கருக்கு  ஒராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தரணிதர் தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து அவர்  காவல்துறையினர் பாதுகாப்புடன் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here