திருத்துறைப்பூண்டி, மார்ச். 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக கு.அம்பிகபதி

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் சர்வதேச பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று 3 நாட்கள் நடைப்பெறும் சிவராத்திரி நாட்டியாஞ்சலி பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சா்வதேச  பரதநாட்டிய  கலைஞா்கள் பங்குபெறும் 3 நாட்கள் நடைப்பெறும் நாட்டியாஞ்சலி பெருவிழா மார்ச்-8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி நாளை முடிவடைகிறது.

திருவாருா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பிரசித்தி பெற்ற  பிறவி மருந்தீசா் திருக்கோயில் அமைந்துள்ளது. அத்திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி பெருவிழா கடந்த 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை ) தொடங்கி நாளை 10-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முடிவடையும் 3 நாட்கள் சிவராத்திரி நாட்டியஞ்சலி பெருவிழா நடைபெற்று வருகிறது.

அதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகளில் இருந்து சுமார் 500 -க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞகள் கலந்து கொண்டு நடனம்  ஆடி வருகின்றனர். அதற்காக திருக்கோயிலின் உட்புற அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், அந் நாட்டியாஞ்சலி பெருவிழாவை திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ, மாரிமுத்து தொடங்கி வைத்து பரதநாட்டிய கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

மேலும் அத்திருக்கோயில் செயல் அலுவலர் முருகையன்  தலைமை தாங்க, நகா்மன்றத் தலைவா் கவிதாபாண்டியன், ஒன்றியக்குழுத் தலைவா் பாஸ்கா், நகராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பாண்டியன், நாட்டியாஞ்சலி பெருவிழா குழு கௌரவத் தலைவர் பொறியாளர் செல்வகணபதி ஆகியோர் முன்னில வகித்தனர்.

நாட்டியாஞ்சலி பெருவிழா குழு செயலாளர் டாக்டர் ராஜா அறிமுக உரையாற்றினார். அமைப்புச் செயலாளர் எடையூர் மணிமாறன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிவனடியார் திரு கூட்டமைப்பு பொறுப்பாளர் கயிலை மணி பசுபதி நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்.

முதல் நாளான சிவராத்திரி தினமான நேற்று சென்னை கிருஷ்ணப்ரியா ஜெயகர் குழுவினர் பரதநாட்டியம், தஞ்சாவூர் சௌமியா சுகன்ராஜ் குழுவினர் பரதநாட்டியம், பெங்களுா் ராஜஸ்ரீ ராமு குழுவினர் பரதநாட்டியம், மும்பை அபேக்ஷா நிரஞ்சன் குழுவினர் பரதநாட்டியம், சென்னை லலிதா கணபதி குழுவினர் பரதநாட்டியம், சென்னை ரங்காஸ்ரீ ரகுநாதன் குழுவினர் பரதநாட்டியம், பெரியகுளம் சுபஸ்ரீ சசிதரன் குழுவினர் பரதநாட்டியம், நாகப்பட்டினம் ராஜமீனாட்சி குழுவினர் பரதநாட்டியம், நாகப்பட்டினம் முத்துலட்சுமி குழுவினர் பரதநாட்டியம், நாகப்பட்டினம் இளையராணி விஜயகுமார் குழுவினர் பரதநாட்டியம், நாகப்பட்டினம் என்.பாலகுமார் குழுவினர் பரதநாட்டியம், திருத்துறைப்பூண்டி பாரதமாதா நாட்டியப்பள்ளி தொல்காப்பியா மணிமாறன் குழுவினர்  பரதநாட்டியம், காஞ்சிபுரம் பாண்டியன் குழுவினர் பரதநாட்டியம்,சென்னை கோபிகா வர்மா  குழுவினர்  மோகினி ஆட்டம், மும்பை சுமனா  குழுவினர் கதக், சென்னை சிக்கல் வசந்தகுமாரி குழுவினர் பரதநாட்டியம், ஹைதராபாத் டாக்டர் கே. ஸ்ரீவள்ளி மணிப்பூரி நடனம், சிதம்பரம் சத்திய பாலமுருகன்  குழுவினர் பரதநாட்டியம், மும்பை  பத்மினி ராதாகிருஷ்ணன் குழுவினர் பரதநாட்டியம், மும்பை  டாக்டர் நரேஷ் பிள்ளை குழுவினர் பரதநாட்டியம், மன்னா்குடி குருதீபிகா விஜயசங்கா், இளங்கலைப் பரதப்பள்ளி  குழுவினரின் பரதநாட்டியம், சென்னை  சித்ரா & முரளிதரன் குழுவினர் பரதநாட்டியம், சிங்கப்பூர் அரவிந்த் குமாரசாமி குழுவினர் பரதநாட்டியம், ஆஸ்திரேலியா சாய்ப்ரியா  குழுவினர் பரதநாட்டியம், மங்களூர் டாக்டர் ஆரட்டி ஷெட்டி குழுவினர் பரதநாட்டியம்  சீஷெல்ஸ் நாட்டின் ஆர்த்தி காளிதாசன் குழுவினர் பரதநாட்டியம், சிங்கப்பூர்  தேவி வீரப்பன்  குழுவினர் பரதநாட்டியம், சென்னை ஜெயந்தி சுப்ரமணியம் குழுவினர் பரதநாட்டியம் பெங்களூர் மமதா கரந்த் குழுவினர் பரதநாட்டியம், பட்டுக்கோட்டை  ரமேஷ் கண்ணன்  குழுவினர் பரதநாட்டியம், மன்னார்குடி அ.மாதவர்மன் குழுவினர் பரதநாட்டியம் ஸ்ரீலங்கா திவ்யா சுஜென் குழுவினர் பரதநாட்டியம்,  தும்குரு டி.எஸ்.சாகர் பிரசாத்  குழுவினர் பரதநாட்டியம், மும்பை டாக்டர் ஜெயஸ்ரீ ராஜகோபாலன் குழுவினர் பரதநாட்டியம், சென்னை, ஹேமாவதி கலையரசன்  குழுவினர் பரதநாட்டியம், சென்னை வளர்மதி புருஷோத்தமன்  குழுவினர் பரதநாட்டியம், திருவாரூர் வடிவழகி ராஜ்குமார்  குழுவினர் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு குழுவினரின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் வெகுச்சிறப்பாக நடைப் பெற்றது.

பரதநாட்டியத்தால் சிவபெருமானை வழிபாடு செய்யும் மகா சிவராத்திரி பெருவிழா திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் திருக்கோயிலில் புகழ்பெற்ற விழாவாக ஆண்டு தோறும் நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிவ பக்தர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சியாகவும், உலகிலேயே நடராஜர் சிலைக்கு முன்பாக நிரந்தர மேடை அமைக்கப்பட்டு பரதநாட்டியம் நடைபெறுவது திருத்துறைப்பூண்டி  பிறவி மருந்தீசா் திருக்கோயிலில் மட்டுமே என சான்றோர் தெரிவிக்கின்றனர்.

அதனால் பரதநாட்டிய கலைஞர்கள் உலக அளவில் இருந்து திருத்துறைப்பூண்டி திருத்தலத்தில் பரதநாட்டியம் ஆடுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவிலான பரதநாட்டிய கலைஞர்கள் நாட்டியாஞ்சலி பெருவிழாவில் பங்கேற்பதற்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். விழாவிற்கான  ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி நாட்டியாஞ்சலி பெருவிழா குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபிரகாஷ், முருகன், துரை ராயப்பன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள்  செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here