ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் காஷ்மீரில் நேர்ந்த குண்டு வெடிப்பில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது.
நமது இந்திய நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்பு படையினருக்கு காஷ்மீரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தொண்டி பாவோடி மைதானத்தில் தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஐக்கிய ஜமாத் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் சாதிக்பாட்சா, அப்துல்லா, அயூப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொண்டி கடற்கரை பள்ளிவாசல் இமாம் அப்துல் ஜப்பார் யூசப் கிராஅத் ஓதினார். தொண்டி ஐக்கிய ஜமாத் செயலாளர் செய்யது அலி வரவேற்றார். தொண்டி புதுபள்ளிவாசல் இமாம் முகய்யதீன் ஹமிதீ , மேலப்பள்ளிவாசல் இமாம் முகம்மது ஹனீப்ஜமாலி , தொண்டி பெரியபள்ளிவாசல் இமாம் செய்யது முகம்மது காசிம்யூசப் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து பேசினர். தொண்டி புதுப்பள்ளிவாசல் துணை செயலாளர் ஜவஹர் அலிகான் நன்றி கூறினார்.