மயிலாடுதுறை, மே. 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…

பாதுகாக்கப்பட்ட வேளான்மை மண்டலத்தில், மராமத்து பணி என்கிற பெயரில் O.N.G.C நிர்வாகம் சார்பில் தொடர் பணிகளை பக்கவாட்டில் செய்து ஷேல் கேஸ் எடுக்க பணி செய்து வருகிறது. தமிழக அரசு அந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கினைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் செய்தியளர்களுக்கு பேட்டியளித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கினைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது.

நேற்று ONGC நிர்வாகத்தின் பேரில் தெரிவித்த செய்தியில், பயன்பாடற்ற 5. என்னெய் கினறுகளை நாங்கள் மூடி விட்டோம் மீத முள்ள – 35 கிணறுகள் தான் தற்போது எங்களிடம் இருப்பதாகவும் – அதில் குத்தாலம் பகுதிகளில் அதிகளவு மீத்தேன் ஷேல் கேஸ் இருப்பதாகவும் . அதை முழுமையாக எடுக்க தமிழக அரசு ஒத்துழைத்தால், இந்தியாவிலேயே அதிக மீத்தேன் ஷேல் கேஸ் எடுக்கலாம். என்றும், இதனால், தமிழக அரசுக்கு – ஆண்டுக்கு பல லட்சம் கோடி ராயல்டி கிடைக்கும் என்றும், மேலும், தமிழகத்திற்கு பல லட்சம் யூனிட் மின்சாரம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் ONGC நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றும்,

இந்த மராமத்து பணி என்பது, தற்போது உள்ள, ONGC கிணறுகளில், 1500 மீட்டர் ஆழத்திற்கு கீழ் – பக்கவாட்டில், 3000 மீட்டர் தொலைவுக்கு தொரப்பன பணிகளை செய்து ஷேல் கேஸ் எடுக்க மராமத்து பணி என்கிற பெயரில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த பாதுகாக்கப்பட்ட வேளான்மை மண்டலமான ஆறு மாவட்டங்களில், 2011 ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி. ஒரு கோடியே 60 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்..

மேலும் அவர்களின், வாழ்வாதாரம், குடிநீர், விவசாயம் இந்த ஷேல் கேஸ் எடுப்பதினால் மிகவும் பாதிக்கப்படும். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தி அந்த கிணறுகளை ஆய்வு செய்யலாம் என்றது. ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகம் அதை பற்றி மேற்கொண்டு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே, தமிழக அரசு கடந்த 2020 ஆண்டு இந்த ONGC கெயில் நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்த அமைக்கப்பட்ட சுல்தான் இப்ராகிம் குழு அமைக்கபட்ட, அந்த குழு 2022ம் ஆண்டு தமிழக அரசின் அறிக்கையை சமர்பித்து உள்ளது.

எனவே, தமிழக அரசு பாதுகாக்க பட்ட வேளான்மை மண்டலத்தில் வாழும் 1-60 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்துக்கு முன்னுரிமை தந்து,மக்களை, விவசாய நிலங்களை அழித்து, தமிழக அரசுக்கு தரும் ராயல்டி மனதில் கொள்ளாமல், மக்கள் உயிரை விட ONGC என்னெய் கேஸ் நிறுவனத்தின் ராயல்டி முக்கியம் இல்லை என தெரிவித்து,சுல்தான் இப்ராகிம் அறிக்கை அமல்படுத்தும் வரை, மீத்தேன் ஷேல், கேஸ் எடுக்கும் ONGC நிர்வாகமும், எந்தவித பராமரிப்பு பணியிலும் ஈடுபட கூடாது என தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அறிவிக்க வேண்டும் என பேட்டி அளித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here