குத்தலாம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
போல் வால்ட் ( கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் ) போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பரணிகா எனும் விளையாட்டு வீரங்கனை வெள்ளி பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், மே 14-ஆம் தேதி நடைபெற்ற பெண்களுக்கான போல் வால்ட் போட்டியில் தமிழ்நாடு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சேத்திரபாலபுரத்தில் வசிக்கும் விவசாயி இளங்கோவன் என்பவரது மகள் தற்போது ரயில்வே துறையில் எழுத்தராக பணியாற்றிவரும் போல் வால்ட் வீராங்கனை பரணிகா 4 மீட்டர் உயரம் தாண்டி, இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் தட்டிச் சென்றார். இந்த போட்டியில் பரணிகா பங்கேற்ற விடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தின் ரோசி மீனா 4.05 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.