தஞ்சாவூர், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
மங்கள வாத்யங்களில் ஒன்றான தவில் இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது இத்ததைய சிறப்புமிக்க திருவையாறு தவில் வலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்க வேண்டும் என தவில் வலை தயாரிப்பு கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் இசை. நாட்டியம் என கலைகளுக்கு பெயர் பெற்ற மாவட்டமாகும். தஞ்சை என்றால் நினைவுக்கு வருவது தலையாட்டி பொம்மை, ஓவியம். கலைத்தட்டு. நாச்சியார் கோவில் குத்து விளக்கு. அந்த வரிசையில் திருவையாறு தவில் வலை பிரசித்தி பெற்றதாகும்
திருவையாறில் பாரம்பரியமாக தலில் வலை செய்து வருகின்றனர் தற்போது 5 குடும்பங்கள் மட்டும் இந்த கலையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
திருவையாறு தவில் வலையில் உருவான தவிலை வாசிக்காத கலைஞர்களே உலகில் இல்லை என சொல்லலாம்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாவட்டங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆஸ்திரேலியா. லண்டன் பேர்ன்ற வெளிநாடு வாழ் கலைஞர்கள் திருவையாறில் இருந்து தவில் வாங்கி செல்கின்றனர்.
இந்தகைய சிறப்பு வாய்ந்த தவில் வலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்க வேண்டும், வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தவில் வலை தயாரிப்பு கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரம்ப காலத்தில் சிம்பு வலை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதே நாதம். அதே இசையில் பைப் வலை தயாரித்து வருகிறோம் என கூறிய தவில் வலை தயாரிப்பு கலைஞர் தினேஷ்குமார். வலை மீது துணி சுத்தி புளியங்கொட்டை பேஸ்ட்ல கடுக்கா காவி கலந்து நன்றாக அரைத்து வேக வைத்து அதில் இருந்த தயாரித்த பேஸ்ட்டை துணியில் தடவி சுரை வார் பிடித்து, காய வைப்போம் என்றவர். பின்னர் மக்கு தடவி வைப்போம் என கூறிய தினேஷ் குமார் 25 நாட்கள் காய வைப்போம் எனது பட்டறையில் 20 பேர் பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.