கும்பகோணம், மே. 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..

கும்பகோணத்தில் கண்டெய்னர் லாரி மோதி மரக்கிளை முறிந்து மின்கம்பி மீது விழுந்ததில், மின்கம்பி அறுந்து பசு மாட்டின் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.

கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது லாரி இருந்த கண்டைனர் சாலையோரம் இருந்த வேப்ப மரத்தின் கிளையின் மீது மோதியதில் கிளை முறிந்து சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பி மீது விழுந்தது. அப்போது சாலையில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டின் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பசு மாடு துடிதுடித்து உயிரிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார் கோவில் காவல்துறையினர் கண்டைனர் லாரி ஓட்டுநர் மற்றும் உயிரிழந்த பசு மாட்டின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் கம்பி அருந்து விழுந்த மின் கம்பத்தின் மின் இணைப்பை துண்டித்தனர். அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில் மின் கம்பி அறுந்து விழுந்த சமயத்தில் அந்த வழியாக கார், இருசக்கர வாகனம், பேருந்து போன்ற பயணிகள் வாகனங்கள் செல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here