மயிலாடுதுறை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் சுவாமிக்கு சிறுதொண்ட நாயனார் பிள்ளைக்கறி அமுது படையல் இட்டதை போற்றும் வகையில் அமுது படையல் விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டு இன்று பரணி நட்சத்திரத்தில் 195வது அமுது படையல் விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு உத்தராபதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து துறவிகள் பலர் கலந்து கொண்டு சுவாமிக்கு அமுது படையல் இட்டனர்.
இதில் கலந்துக் கொண்டு படையலிட்ட உணவை வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் நோயில்லா வாழ்வு உள்ளிட்ட சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள் என கூறப்படுகிறது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உத்தராபதீஸ்வரரை தரிசனம் செய்து அமுது படையல் இட்டு உணவை பொறுமையுடன் காத்திருந்து வாங்கி உண்டனர்


















