மயிலாடுதுறை, மே. 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் கூடு கட்டி உள்ள தேன் பூச்சிகளால் அங்குள்ள உள் நோயாளிகள் பெரும் அவதி பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் மேலும் உடனடியாக அதனை அப்புறப்படுத்தும் படியும் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், நகரின் மைய பகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் 7 மாடியில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவ கட்டிடம் உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வரும் நிலையில், உயர்ந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் தேன்கூடு ஒன்று உள்ளது. அதில் ஆயிரக்கணக்கான தேன் பூச்சிகள் வசித்து வருகின்றன. அத் தேனீப் பூச்சிகள் மருத்துவமனை வளாகத்தின் உள்ளே வருவதால் நோயாளிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

மேலும் பிறந்த குழந்தைகள் முதல் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த தேனீப் பூச்சிகள் கொட்டினால் குழந்தைகள் உயிருக்கே ஆபத்தாக முடியும் நிலை உள்ளது. அதனால் நிர்வாகம் விரைவாக தேன் கூட்டை அப்புறப்படுத்தும் படி உள்நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here