கம்பம் நகர சலவைத் தொழிலாளர்களுக்கு பாத்தியப் பட்ட கோவிலை தனி நபர்கள் ஆக்கிரமித்து தங்களை மிரட்டி வருவதாக பொன்னி விரைவு சலவைத் தொழிலாளர் சங்க தொழிலாளர்கள் தேனி மாவாட்ட ஆட்சியாளரிடம் தங்கள் சமூகத்திற்கு பாத்தியப் பட்ட கோயிலை மீட்டுத்தர வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர்.
தேனி: ஜூலை, 1 –
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப் பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாளான இன்று பொன்னி குவிக்சலவை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு ஒன்றினை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர் .
அம் மனுவில் அவர்கள் கோரிவுள்ளதாவது, தாங்கள் கம்பம் நகரத்தில் சுமார் 150 ஆண்டுகளாக இந்து வண்னார் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் 200 தலைக்கட்டுவரை அங்கு வசித்து வந்து உள்ளதாகவும் , கம்பம் சுருளி பட்டி சாலையில் உள்ள தொட்ட மன்துறையில் சலவை தொழிலாளர்களின் குல தெய்வ கோவில் அமைந்துள்ளது. செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடுகள் செய்தும் திருவிழா நேரங்களில் வழிபாடுகள் செய்தும் வருவதாகவும். தற்போது வரை அந்த இடத்திற்கு வண்ணான் துறை என்று குறிப்பிட்டு வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐயப்பன் என்ற நபர் தனது பொருப்பில் தனிக் கோவில் கட்டி தங்கள் கோவிலுக்கு தள்ளி தனி பாதையில் கட்டி வருகிறார் மேலும் தங்களின் இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து தங்களை செந்தில் என்பவருடன் சேர்ந்து மிரட்டி வருவதாகவும், கோவில் பாதுகாப்பிற்காக போட பட்ட வேலிகளை ஜே.சி.பி இயந்திரம் மூலம் தரைமட்டம் ஆக்கி உள்ளதாகவும் இது பற்றி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் அதன் மீது மாவட்ட ஆட்சியாளர் உடனடி நடவடிக்கை எடுத்து தங்கள் சமூகத்திற்கு சொந்தமான கோயிலை மீட்டுத் தரும் படி கொடுத்து உள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்து உள்ளனர் .