தஞ்சாவூர், மே. 04 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

ஹீமோபிலியா நோய் தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுவதை முன்னிட்டு அதன் பகுதியிக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நோய் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இரத்தத்தில் உறையக்கூடிய அணுக்கள் குறைபாடு  காரணமாக ஏற்படக்கூடிய நோய் ஹீமோபிலியா என்று அழைக்கப்படுகிறது. இந்நோய் பரம்பரை நோயாகும், இப்பாதிப்பு உள்ளவர்களுக்கு  ஏதேனும் காயம் ஏற்பட்டால், இரத்த உறைதல் குறைபாடு காரணமாக இரத்தம் வடிவது தொடர்ந்து கொண்டே இருக்கும், இதற்க்கு ஊசி மூலம் அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உலக ஹீமோபிலியா தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹீமோபிலியா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த கையேடு மற்றும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பனியன்கள்,  மருந்துகள் வழங்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன்…..

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை மாவட்டம் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து 45 முதல் 50 நோயாளிகள் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.

இந்த நோய்க்கு தேவையான விலை உயர்ந்த மருந்துகள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டுதோறும் 2 முதல் 2.5 கோடி ரூபாய் வரை தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இந்த நோய் குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஆரம்ப காலத்தில் இருந்தே இதற்கு சிகிச்சை அளித்தால் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் மேலும் முறையான ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அவசியம் எனவும் தெரிவித்தார். இதனை குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது உரிய முறையில் பரிசோதனை செய்து இந் நோயில் இருந்து விடுபட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் இது ஒரு பிறவி நோய் எனவும் தெரிவித்தார். .

இந்நிகழ்ச்சியின் போது, துணை முதல்வர் ஆறுமுகம், மருத்துவக் கண்காணிப்பாளர் ராமசாமி, பொது மருத்துவத் துறை தலைவர் கண்ணன், உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.

பேட்டி. பாலாஜி நாதன்

தஞ்சை மருத்துவ கல்லூரி முதல்வர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here