திருத்துறைப்பூண்டி, மே. 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் மற்றும் அம்பிகாபதி…

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கொக்காலடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு காப்பு கட்டுதல் தொடங்கி தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை காட்டப்பட்டு, அம்பாள் வீதி உலா  மற்றும் அன்னதானம் வழங்கல் போன்ற நிகழ்வுகள் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது.

 

அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளிக்கிழமையான இன்று மிகுந்த பாதுகாப்புடன் தீ மிதி திருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டப்பக்தர்கள் பால் காவடி எடுத்து வந்து தீ மிதித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். மேலும் அவ்விழாவில் உள்ளூர் மட்டுமல்லாது சுற்றுப்புற கிராமங்களிலிருந்து செடில் காவடிகள், அலங்கார காவடிகள் அணி வகுத்து வந்து தீயில் இறங்கி  அம்மனை வழிபட்டனர்.

மேலும் அவ்விழா சிறப்பாகவும் மிகுந்த பாதுகாப்புடனும் நடைப்பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஊராட்சித்தலைவர், உறுப்பினர்கள்  மற்றும் அவ்வூர் கிராம மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து வெகுச் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here