திருவள்ளூர், ஏப். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரத்தில் அதிமுக கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர் பானங்களை வழங்கினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க பொது மக்களுக்கு குளிர்ச்சியான பொருட்களை வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் திருவள்ளூர் ரயில் நிலையம், ஆயில்மில், தலைமை தபால் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பேருந்து நிலையம் எதிரில் ஆகிய பகுதிகளில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா திருவள்ளூர் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் குளிர்ச்சியான தர்பூசணி, மோர், ரோஸ் மில்க், வெள்ளரி பிஞ்சு, திராட்சை பழ ஜூஸ், கிருணிப்பழம் ஜூஸ் என குளிர்ச்சியான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதில் மாவட்ட பொருளாளரும், மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான பாண்டுரங்கன், திருவள்ளூர் நகர அதிமுக செயலாளர் ஜி.கந்தசாமி, நிர்வாகிகள் ராம்குமார், கவுன்சிலர்கள் செந்தில்குமார், சித்ரா விஸ்வநாதன் மற்றும் பாலாஜி, குமரசேன்,எஸ்.ஏ.நேசன், ஜோதி, விஜயகாந்த் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.