காஞ்சிபுரம், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
அதில் பங்கேற்ற ஓவியத்தில் ஆர்வமுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப் பயிற்சி முகாமினால் ஓவியத் திறன் மூலம் தனது தனித்துவம் மற்றும் ஒருமித்த செயல் ஆகியவை பெரும் பயன் கொண்டதாக அமைந்ததாக தனியார் சிறுவர் இல்ல மாணவிகள் பெருமிதம் கொண்டனர்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த இரு மாதங்களாக அரசு தேர்வுகளை மேற்கொண்டு தற்போது பள்ளி கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள பல்வேறு தரப்பினர் தங்கள் பிடித்த துறைகளில் சிறப்பு பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள சைல்ட் ஏவன் சிறுவர் இல்லத்தில் சுமார் 200 குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். இந்தக் கோடை காலத்தில் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் நோக்கில் ஓவியத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ள 50க்கும் மேற்பட்ட சிறுவர்களை இன்று இல்ல நிர்வாகிகள் ஆசிரியர்கள் காஞ்சிபுரம் புகழ்பெற்ற கைலாசநாதர் திருக்கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
திருக்கோயிலில் உள்ள சிற்பங்களை மாணவர்கள் பார்வையிட்ட பின் அவர்களுக்கு பிடித்த சிற்பங்களை ஓவியங்களாக நேரலையில் வரைந்து அதில் உள்ள குறைகளையும் நீக்கி மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மாணவிகள் கூறுகையில் , ஒருமித்த சிந்தனையுடன் இந்த சிற்பங்களை கண்டு ரசித்தும் வரைந்தும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் இது தங்கள் கல்விக்கும் , வாழ்க்கைக்கும் சிறந்த பயிற்சியாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
இந்த ஓவிய பயிற்சியை அரசு பள்ளி மாணவர்கள் எளிமையாக மேற்கொண்டது. திருக்கோயிலுக்கு வந்த அனைவரையும் ஒரு நிமிடம் பார்வையிட செய்தது.























