தஞ்சாவூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
மிகவும் பிரசித்தி பெற்ற பேச்சியம்மனுக்கு பெருசாந்தி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மன்பேட்டையில் பேச்சியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
இந்நிலையில் இங்கு பெருசாந்தி பெருவிழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நவதானியங்கள், பழங்கள், பட்டு வஸ்திரம் கொண்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம், திரவியம் பொடி உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். என்ன கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






















