திருவாரூர், ஏப். 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …

வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் பறிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டிய மையத்தை முடிவு செய்யாமல் வாக்காளர்களை அலைக் கழிப்பதாக வழக்கறிஞர் சிவசங்கரன் என்பவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் நகரத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் சிவசங்கரன்.  இவர் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும், பத்திரிக்கையாளர் சங்கத்தின் இயக்குநராக டெல்லியில் பணியாற்றி வருகிறார்.

மேலும் குடவாசல் நகரில் நிரந்தரமாக வசித்து வரும் அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார்அட்டை என அனைத்து அரசு ஆவணங்களும் அவரது நிரந்தர முகவரியில் இருந்து வருகிறது.

ஆனால் இவருக்கு வழங்கப்பட்ட பூத் ஸ்லிப்பில் வாக்களிக்கும் மையம் பற்றி குறிப்பிடப்படாத நிலையில் வாக்களிக்கும் மையத்தை முடிவு செய்யும் வகையில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் நேரில் சென்று முறையிட்ட போதிலும் இதுவரை எந்தவித தீர்வும் அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கப் பெறவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.

அதனால் சிவசங்கரன் வரும் 19ம் தேதி தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழல் எழுந்துள்ளதாகவும், அதனால் தான் விரக்தி அடைந்துள்ளதாகவும், மேலும் அதுக்குறித்த புகார் மனுவினை இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சம்மந்தப்பட்ட அதிகாரியை சந்தித்து புகார் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் மக்களின் வரிபணத்தில் 100 சதவீதம் வாக்குபதிவினை வலியுறுத்தி பல்வேறு வழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி விட்டு, வாக்காளர்களுக்கான வாக்களிக்கும் மையத்தை முடிவு செய்யாமல் அரசு அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயல்படும் நிலையில் 100 சதவீத வாக்குப் பதிவு எவ்வாறு சாத்தியமாகும் என சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பிவுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்..

மேலும் வழக்கறிஞருக்கே இத்தகைய நிலை என்றால் சாதாரண மனிதர்களின் நிலை என்னவாகும் என தனது மனவேதனையைத் தெரிவித்த வழக்கறிஞர் சிவசங்கரன், எனக்கு வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டால் நாகை நாடாளுமன்றத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டு மறு வாக்குபதிவு ஏற்படக்கூடிய நிலை உருவாகும் என தேர்தல் ஆணையத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

பேட்டி: சிவசங்கரன், வழக்கறிஞர்,

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here