சீர்காழி, ஏப். 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …

சீர்காழி அருள்மிகு சட்டை நாதர் சுவாமி திருக்கோயிலில் திருமுலைப்பால் திருவிழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் மேலும் அவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டு வந்த பாலினை நிவேதனம் செய்யப்பட்டு திருஞானசம்பந்தருக்கு பருகிட படைத்தனர்.

மயிலாடுதுறை  மாவட்டம், சீர்காழியில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனடியாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி இத்திருத்தலத்தில் அருள் பாலிக்கிறார்.

மேலும் காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னிதியில் அருள் பாலிக்கின்றனர்.   இத்திருக்கோயிலில் சிவபெருமான் ஸ்ரீ பிரமபுரீசுவரர், ஸ்ரீ தோணியப்பர் மற்றும் ஸ்ரீ சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இக்கோயிலில் அஷ்ட பைரவர்கள் ஒரே சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டியதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொறு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெரும் பிரமோற்சவ விழாவின் 2 ஆம் நாள்  திருமுலைப்பால் விழா நடைபெறும்.

அதன்படி இன்று திருமுலைப்பால் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக திருஞானசம்பந்தர் சந்நிதியில் திருஞானசம்பந்த பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு ஆபரணங்கள் மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு முத்து சிவிக் கை பல்லக்கில் எழுந்தருளினார்.

தொடர்ந்து பக்தர்கள் பல்லக்கை சுமந்து வர ஓதுவார்கள் தேவாரப் பதிகங்கள் பாடி பல்லக்கு பிரம்ம தீர்த்தக் குளக் கரையை வந்தடைந்தது. அங்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் திருஞானசம்பந்தருக்கு மலைக்கோயில் இருந்து உமையம்மை சிறப்பு வாயில் வழியாக எழுந்தருளி தங்க குடத்தில் இருந்து ஞானப்பாலை பொற்கிண்ணத்தில் எடுத்து திருஞானசம்பந்தருக்கு வழங்கும் ஐதீக நிகழ்வு சிவாச்சாரியார்கள் செய்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து உமையம்மை, சுவாமி -அம்பாள் ஆகியோர் ரிஷப வாகனத்தில் திருஞானசம்பந்தருக்கு காட்சி அருளும் நிகழ்வும் செய்து ஒரு சேர தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டு வந்த பாலினை திருஞானசம்பந்தருக்கும் சுவாமி அம்பாள் உமயம்மைக்கும் நிவேதனம் செய்து பருகி தங்கள் குழந்தைகளுக்கும் வழங்கினர்.

தொடர்ந்து திருஞானசம்பந்தர் சுவாமி அம்பாளை மூன்று முறை வலம் வந்து கோயிலையும் வலம் வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி சுவாமியை வழிப்பட்டு உளம் மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here