சீர்காழி, ஏப். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள குமாரகுடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தினை அறிவித்துள்ளனர். அதற்கான காரணமாக அவர்கள் தெரிவிப்பது, தங்கள் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர், சாலை வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்து வருவதாக தெரிவித்தனர்.

மேலும் அதனைக் கண்டித்து எதிர் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியன்று தங்களது ஆதார், தேர்தல் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்டவைகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக கிராம கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

சீர்காழியை அடுத்து உள்ள கீழமாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குமாரக்குடி கிராமத்தில் சுமார் 400- க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு வசித்து வருகின்றனர்.

மேலும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும் இக்கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என அவ்வூர் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தங்களது கிராமத்தில் கடந்த 20 வருடங்களாக குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பயணித்தும், உவர்ப்பு குடிநீரை பருகியும் வருவதாக அவர்கள் மேலும் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அப் பிரச்சினைகள் குறித்து அரசு சார்ந்த உள்ளூர் முதல் மாவட்ட அளவிலான நிர்வாகத்தின் கவனத்திற்கு வாய்மொழி மற்றும் எழுத்துப் பூர்வமான மனுக்கள் வாயிலாகும் பல்வேறு காலக் கட்டங்களில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி தெரிவித்து வருவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் உள்ளூர் முதல் மாவட்ட அளவிளான மக்கள் பிரதிநிதிகளிடமும் எங்கள் ஊர் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து தெரிவித்து தற்போது மிகவும் களைத்து போய்விட்டோம் என்கின்றனர் மிகுந்த கோபத்துடன்.

அது மட்டுமல்லாமல் தேர்தல்களின் போது ஒவ்வொரு முறையும் தங்களது பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் தங்களது கிராமத்தில் உள்ள அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்து செல்கின்றனர். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

அதனால் இனி அவர்கள் வாக்குறுதியை நம்பி கடந்த 20 ஆண்டுகளாக ஏமாந்து நிற்போது போல் இனியும் நாங்கள் ஏமாற தயராக இல்லை எனவும், மேலும் தேர்தல் என்பது அவர்கள் ஆளுவதற்காக அல்ல எங்களின் தேவைகளை அறிந்து எங்களுக்கு சேவையாற்றிட வேண்டியே அவர்களுக்கு நாங்கள் பிரதிநிதித்துவம் வழங்கின்றோம். ஆனால் அதை அவர்கள் எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறார்கள். அதனால் இம்முறை எங்கள் உரிமைகளை இனியும் அவர்களுக்கு வழங்கி நாங்கள் ஏமாறத் தயராக இல்லை என அவர்கள் மிகுந்த ஆவேசத்துடன் தெரிவிக்கின்றனர்.

அதனால் இனி வரும் தேர்தலில் வாக்கு கேட்க வருபவர்கள் ஏற்கனவே எங்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றித் தந்தால் மட்டுமே வர வேண்டும் என திட்டவட்டமாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வரக்கூடாது என போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அடித்து கிராமப் பகுதியில் ஒட்டி உள்ளனர்.

.இந்நிலையில் இன்று குமாரகுடி கிராமத்தில் கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தங்களது கிராமத்திற்கு இதுவரையில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தராத அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் தங்களது பகுதியில் வாக்கு சேகரிக்க வரக்கூடாது எனவும், இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வருகின்ற 14 ஆம் தேதி தங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை வட்டாட்சியரிடம் ஒப்படைக்க போவதாகவும் கிராம மக்கள் கூட்டத்தில் ஒருமனதாகவும் ஒட்டு மொத்தமாகவும் முடிவு செய்துள்ளனர்.

 

பேட்டி:-

‌‌ 1.

  1. சுசிலா கிராம மக்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here