மயிலாடுதுறை, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காட்டில் அமைந்துள்ள மிக பழைமையான அருள்மிகு அங்காள பரமேஸ்வரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அத்திருக்கோயிலுக்கு புணருதானம் செய்யப்பட்டு இன்று மகா கும்பாபிசேகம் நடைபெற்றது.
அக் குடமுழுக்கை முன்னிட்டு, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் நிரம்பிய கடங்களை வைத்து யாகசாலை அமைக்கபட்டு நான்கு கால பூஜைகள் சிவாச்சாரியார்களை கொண்டு, நடைபெற்றது.
அதன் நிறைவாக இன்று யாகசாலையில் பூர்னா குதி நடைபெற்று புனித நீர் கடங்களை சிவாச்சாரியார்கள் சிரத்தினில் தாங்கி மேளதாளம் முழங்க கோயிலை வலம் வந்து அவ்வூரின் காவல் தெய்வங்கள் தீபாதாரணை காட்டப்பட்டு பின் கோபுர கலசத்திற்கு மந்திர உச்சா டானம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, வான வேடிக்கை நடைபெற மேள தாளம் முழங்க, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிசேகம் நடைபெற்றது.
மேலும் இக்கோயில் கும்பாபிசேகத்தை காண உள்ளூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியிகளில் இருந்து வந்திருந்த ஆயிர கணக்கானப் பக்தர்கள் அம்மனை பக்தி பரவசத்துடன் வணங்கி வழிப்பட்டனர். தொடர்ந்து அங்காள பரமேஸ்வரியம்மனின் அருள் பிராசதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.





















