ஊத்துக்கோட்டை, மார்ச்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறையினர் என அனைத்து தரப்பு அரசு நிர்வாகமும் அதிரடி நடைவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் பகுதியாக ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரன் தலைமையில் திடீர் வாகன சோதனை மேற்கொண்ட போது தனி நபர் வாகனத்தை பப்ளிக் வாகனமாக பயன் படுத்தப்பட்ட ஐந்து தனியார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து வாகனங்களை மேல் நடவடிக்கைக்காக வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரன் திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தார். .





















