தஞ்சாவூர், மார்ச். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயம் என்பது 10 பசிலிக்காவில் ஒன்றாகவும், மேலும் அப்பேராலயத்திற்கு கிறிஸ்தவர்கள் வெளி மாநிலம் வெளி மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் திரளானவர்கள் வருகைத் தருகிறார்கள் எனத் தெரிய வருகிறது.

மேலும் அப்பேராலத்தில் தவக்காலத்தை முன்னிட்டு இன்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. முன்னதாக செபஸ்த்தியார் மேடையிலிருந்து அதிபர் பி.ஜே. சாம்சன் குருத் தோலைகளை புனிதப் படுத்தி பவனியை துவக்கி வைத்தார். அதில் சுற்று வட்டார கிறிஸ்தவர்கள், வெளியூரிலிருந்து திரளானவர்கள் வந்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அன்னையின் பக்தர்கள் பவனியாக வீதி வழியாக வந்து பேராலயத்தை அடைந்து பின்னர் அதிபரும், பங்கு தந்தையுமான சாம்சன் தலைமையில் துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், உதவி பங்கு தந்தைகள், ஆன்மீக பங்கு தந்தைகள், குருத்தோலை ஞாயிறு சிறப்புத்திருப்பலியை நிறைவேற்றினார்கள்.

குருத்தோலை ஞாயிறு திருப்பலியில் திரளான சுற்று வட்டார அன்னையின் பக்தர்கள் திருப்பலியில் கலந்து கொண்டு இறையாசிர் பெற்று சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here