போரூர்:
எம்.ஜி.ஆர்.நகர், அம்பேத்கர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்கிற முன்ட குட்டி(37). பிரபல ரவுடியான சீசிங் ராஜா என்பவரின் கூட்டாளி. முன்டகுட்டி மீது கொலை, கொலை முயற்சி, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
கடந்த ஆண்டு ரவுடி சி.டி.மணியின் கூட்டாளிகளான கோபி, கார்த்திக் ஆகிய இரண்டு பேரையும் ஆந்திர மாநிலம் சித்தூரில் வைத்து வெட்டி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள்.
இந்த நிலையில் கடந்த மாதம் எம்ஜிஆர் நகர் சூளை பள்ளம் பகுதியில் பதுங்கி இருந்த முன்டகுட்டியை தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
முன்டகுட்டி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எம்ஜிஆர் நகர் போலீசார் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று முன்டகுட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வ நாதன் உத்தரவிட்டார்.