திருவாரூர், மார்ச். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்

திருவாரூர்  மாவட்டம்,  திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை மாங்குடி அருகேவுள்ள பாண்டவை ஆற்று பாலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்த பார்சல் சர்வீஸ் வாகனத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட  16  தையல் எந்திரம், நான்கு மூட்டைகளில் 600க்கும் மேற்பட்ட புடவைகள் இருந்தன. உடனடியாக பறக்கும் படை அலுவலர் காமராஜ், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அம்பிகாபதி, காவலர் ஜெயசீலன்  சோதனையின் போது பிடித்தனர்.

ஆவணம் இன்றிபிடிபட்ட பொருட்களை திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் தடுப்பு பொருட்கள் ஒருங்கிணைப்பு அலுவலர் பாரதி பார்வையிட்டு ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட பொருட்களை திருவாரூர் மாவட்ட சார்நிலை கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here