புதுச்சேரி, மார்ச். 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் அதன் மாநிலத் தலைவர் லட்சுமி நாராயணன், மாநில மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது,

புதுச்சேரி மாநில பாஜக மாநில தலைவர் செல்வ கணபதி வழிகாட்டுதலின் பேரில், புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ரெட்டியார்பாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்தாக தெரிவித்தார்.

மேலும் அக்கூட்டத்தில் மீண்டும் மோடி  வேண்டும் மோடி என்ற முழக்கத்தோடு  நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான மக்கள் தொடர்பு குறித்தும் நமது மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க நாம் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு துறைகளில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்களை வீடு வீடாக சென்று நேரில் சந்தித்து மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற முழக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என அப்போது அவர் தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில் புதுச்சேரி விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை மாநில துணை தலைவர்கள் S.விஷ்ணு ,N.விசா ஏழுமலை மற்றும் மாநில செயலாளர்கள் A.அருள்குமார், எம்.கார்த்திக், பகி.வடிவேலன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் G.சந்தோஷ், C.கர்ணன் எம்.மதன், A.ராம்பிரபாகர்  வில்லியனூர் மாவட்ட தலைவர் K.விஜயராஜ் மற்றும் உழவர்கரை மாவட்ட தலைவர் K.அரவிந், நகர மாவட்ட தலைவர், எஸ். பாபு உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here