பொன்னேரி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லிஅம்மை அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடிமரத்திற்கு பால் இளநீர் சந்தனம் கலச நீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது,பிரமோற்சவ விழாவில் முக்கிய விழாவாக வருகிற 22 ஆம் தேதி திருத்தேரோட்டமும் 25 ஆம்தேதி தெப்போற்சவமும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது, கொடியேற்ற விழாவில் செங்குன்றம், தச்சூர், சோழவரம், மீஞ்சூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை வழிப்பட்டனர். முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிவபெருமான் விநாயகர் முருகன் ஆகியோருடன் மேளதாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அச்சிறப்பு மிகு விழாவில் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் கோவில் நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.























