தஞ்சாவூர், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மஹா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த 8 ஆம் தேதியன்று தொடங்கிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற்று வந்தது. மேலும் முதல் நாள் அரசு விழா நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டியம் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரகன் நாட்டியஞ்சலி சார்பில் நிகழ்ச்சிகள் 6 நாட்கள் நடத்தப்பட்டன அதில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து 35 குழுக்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்குபெற்று பெரிய கோவிலின் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் இசை நாட்டிய அஞ்சலி செலுத்தினர்.
அதைப்போல் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று மைசூர் பெங்களூர் மும்பை திருவாரூர் தஞ்சாவூர் சேர்ந்த குழுவினரின் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது,





















