மீஞ்சூர், மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மீஞ்சூரில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூர் திமுக மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எம்.என்.கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம் மீஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அச்சிறப்பு மிகு முகாம் கைத்தறி மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆர். காந்தி,மாநில ஆதிதிராவிட நலக்குழு தலைவர் க.சுந்தரம், கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான டி.ஜெ.கோவிந்தராசன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி முதலமைச்சரின் புகழ் பரபரப்பும் விழாவாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விதமாக நடைப்பெற்ற ரத்த தான முகாமில் ஏராளமான திமுகவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ரத்தங்களை வழங்கினர்.
மேலும் இலவச கண் மருத்துவ முகாமில் கண் சம்பந்தப்பட்ட பரிசோதனை, கிட்ட பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட பரிசோதனைகளும் கண் கண்ணாடியும் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் கா.சு.தமிழ் உதயன் தலைமையில் மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமில் மீஞ்சூர் பேரூராட்சித் தலைவர் ருக்மணி மோகன்ராஜ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் வில்சன் நிலவழகன்,மருத்துவ அணி துணை அமைப்பாளர்கள் ரியாஸ் அகமது, அன்புச்செல்வன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏ.கே.சுரேஷ், செந்தமிழ் கே.சசிகுமார், தினகரன், ராஜேந்திரன், கணேஷ், கருணாகரன், திருப்பதி, ஏ.சி.ராஜேந்திரன், முப்புராஜ், வழக்கறிஞர் இளையராஜா, மில்லர், தமிழரசு, விமல், ராஜ் குமார், ரமேஷ், அனாஸ், கபீர், ஹிந்துஸ்தான் சீனிவாசன், உதயகுமார், சேகர், ராஜேஷ், சுகன்யா வெங்கடேசன்,ஜோதி,எழிலரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் பிரதிபா தலைமையில் மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலைய ரத்தப் பரிசோதகர் ஷீலா,மருத்துவ குழுவினர் ரத்தம் பெற்று ரத்தம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.
























