தஞ்சாவூர், மார்ச். 10 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

கூட்டணியே இல்லாத போது 370 இடங்களில் வெற்றி 377 இடங்களில் வெற்றி என கூறிவரும் பாஜகவினர், இவ்வளவு சீட்டு வெற்றி பெறும் என்ற நிலையில் உள்ள அக்கட்சிக்கு எதற்கு மற்ற கட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் என்ன ? மேலும் கதவு மற்றும் ஜன்னலை திறந்து இருக்க வேண்டிய அவசியம் என்ன ? புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மீது வந்து விழுங்கள் என சொல்வார்கள் அந்த கதைதான் தற்போது பாஜகவின் நிலை என தஞ்சையில் செய்தியாளர்களிடம் கி. வீரமணி பேட்டியளித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், மணியம்மையாரின் 15 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்திக்கையில் தேர்தல் ஆணையர் தனது பதவியை ராஜினாமா செய்ததும், அதற்கான காரணம் என்ன என்பதுக் குறித்த காரணம் இனிப் போகப் போகத்தான் தெரியும் எனவும், மேலும் ஏற்கனவே ஒரு வழக்கு வந்த போது தேர்தல் ஆணையர்களை அவர்கள் விரும்புகிற போது அவர்கள் விரும்புகிற அளவிற்கு பதவியில் நீடிப்பு ஏழு முதல் எட்டு தடவை கொடுத்ததை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை மாறாக தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு அரசியல் சட்டப்படி குறிப்பிட்ட காலம் அவர்கள் பதவியில் இருப்பதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும் எனவே இந்த நியமனங்கள் சரியில்லை எனவும், மேலும் புதிய நியமனம் வேண்டும் என்று சொன்னதை அரசு ஏற்கவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் அவர்கள் கருதியபடி தேர்தல் பத்திரத்தில் எப்படி மோடி அரசு செய்ததோ அதேபோல் இதையும் தன் வசம் செய்து இருக்கிறார்கள். அது ஒரு மர்ம கதையாக இருக்கிறது. சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைத்திருப்பதை தமிழக பெண்கள் நம்பி ஏமாற மாட்டார்கள் எனவும், திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு முடிவு அந்த முடிவை இனி மாற்ற முடியுமா என்பதற்காகத்தான் சரசாசம் செய்து பார்க்கிறார்கள்.

தேர்தல் கூட்டணி குறித்து பாஜக கதவு திறந்து இருக்கிறது வாருங்கள் என கூறினார்கள் கதவு திறந்தாலும் ஜன்னல் திறந்தாலும் கதவையே கழட்டி வைத்தாலும் கட்டிடத்தையே திறந்து வைத்தாலும் அவர்களை சீண்டுவதற்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா அளவில் ஆட்கள் கிடையாது என அப்போது கி. வீரமணி தெரிவித்தார்.

மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார் என்று சொன்னால் மிகப்பெரிய மருத்துவர் இருக்கும் இடத்திற்கு அடிக்கடி வருகிறார் என்றால் மோடிக்கு  நோய்கள் அதிகம் இருக்கிறது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை மட்டுமல்ல இந்தியாவைப் பொறுத்தவரை பாஜக தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது. எனத் தெரிவித்தார்.

கூட்டணியே இல்லாத போது 370 இடங்களில் வெற்றி 377 இடங்களில் வெற்றிப் பெறுவோம் என கூறி வருகிறார்கள் இவ்வளவு சீட்டு வெற்றி பெறும் என்ற நிலையில் மற்ற கட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் என்ன கதவைத் திறந்து வைக்க வேண்டிய அவசியம் என்ன புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மீது வந்து விழுங்கள் என சொல்வார்கள் அந்த கதைதான் தற்போது பாஜகவின் நிலையென்றார்.

மணிப்பூருக்கு செல்ல தயாராக இல்லை யானை மீது சவாரி செய்ய தயாராக இருக்கிறார் அவர் ஒரு கௌபாய் போல மாறியிருக்கிறார் எனக் கிண்டலடித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here