மயிலாடுதுறை, மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் திருநங்கைகளை பாலியல் தொழிலில் இருந்து மீட்ட திருநங்கைக்கு சிறப்பு விருது வாங்கி கவுரவம் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் உலக மகளிர் தின விழா கடைபிடிக்கப்பட்டது.
தேர்தல் பிரிவு சிறப்பு வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ட்ரீம்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் திருமதி வீரலட்சுமி காவல்துறை கண்காணிப்பாளர் கலைக் கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 80 வயதில் வீடு வீடாக சென்று பத்து ரூபாய்க்கு நான்கு இட்லி விற்கும் மூதாட்டி ஒருவருக்கும், திருநங்கைகளை பாலியல் தொழிலில் இருந்து காப்பாற்றி மாற்று தொழிலில் ஈடுபடச் செய்து பராமரித்து வரும் சினேகா ருத்ராபதி என்ற திருநங்கை உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவரிடத்திலும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அந்நிகழ்வில் பெண்கள் உள்ளிட்ட திரளான பார்வையாளர்கள் பங்கேற்று அந்நிகழ்வினை மேலும் சிறப்பித்தனர்.




















