தஞ்சாவூர், மார்ச். 08 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் இன்று நடைப்பெற்றது. அதில் மகளிர் தினத்தை முன்னிட்டு. ஆணையர் உள்ளிட்ட அனைத்து பெண் மாமன்ற உறுப்பினர்களுக்கும், பட்டு புடவை பரிசாக வழங்கி மேயரும், துணை மேயரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தஞ்சை மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் மேயர் சண். இராமநாதன் தலைமையில் நடைபெற்றது. திருக்குறள் கூறி கூட்டத்தை துவக்கி வைத்த மேயர் அனைத்து பெண் மாமன்ற சகோதரிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துகள் என கூறினார். மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு ஆணையர் மகேஷ்வரிக்கு மேயரும், துனண மேயரும் பட்டு புடவையினை வழங்கி மகளிர் தின வாழ்த்துகள் கூறினார்கள்.

தொடர்ந்து, திமுக. அதிமுக. அமமுக, வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 28 பெண் மாமன்ற உறுப்பினர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள் கூறிய மேயரும், துணை மேயரும் அனைவருக்கும் பட்டுப்புடவை பரிசாக வழங்கினார்கள்.

எனது சகோதரிக்கு மகளிர் தின வாழ்த்துகள் என துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதிக்கு வாழ்த்து கூறிய மேயர் சண். இராமநாதன் அவருக்கு பட்டுபுடவை பரிசாக வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here