பூண்டி, மார்ச். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், கலவை ஊராட்சிக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் கிராமத்தில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்த்துள்ளது.
அதன் அடிப்படையில் செங்குன்றம் வனச்சரக அலுவலர் கிளமெண்ட் எடிசன் தலைமையிலான தனிப்படை அமைத்து, அக்கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை அக்கிராமத்தில் உள்ள ஒருக் கோயிலின் மேல் தளத்தில் பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்து அதனைக் வனச்சரக காவலர்கள் கைப்பற்றினார்கள்.
மேலும் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து அங்கு பதுக்கி வைத்த மர்ம நபர்கள் யாரெனவும், மேலும் அச்செம்மரக்கட்டைகள் எங்குயிருந்து கடத்தி வரப்பட்டது. மேலும் அக்கடத்தலில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது போன்ற பல்வேறு கோணங்களில் வனச்சரக காவலர்கள் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.