திருவள்ளூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலை 1-இல் 630 மெகவாட், நிலை 2-இல் 1,200 மெகாவாட் என நாள்தோறும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது இதே பகுதியில் 3-வது நிலை அமைத்து அதில் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட ரூ. 10 ஆயிரத்து 158 கோடி செலவில் 3-வது நிலை அமைத்து 800 மெகாவாட் மின் திறன் கொண்ட விரிவாக்க பணி கட்டுமான பணிகள் நிறைவுற்று அதில் மின் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது.
அதற்கான திறப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். அவருடன் நீர்நிலை மேலாண்மை துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயிர் தீர்வை துறை மற்றும் கூடுதல் மின் பகிர்மான துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் பகிர்மான துறை செயலர் பீலா வெங்கடேஷ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பொன்னேரி சப் கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
சரியாக ஏழு மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி மின் உற்பத்தி பகிர்மானத்தை திறந்து வைத்தார். முன்னதாக அப்பகுதிக்கு வருகை புரிந்த முதல்வருக்கு வழி எங்கும் திமுக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என திரளானவர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.
மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் உமா மகேஸ்வரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.பி.சிவாஜி, மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி, பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேலு, துணை தலைவர் எம்டிஜி கதிர்வேல், திமுக ஒன்றிய செயலாளர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ், கணியம்பாக்கம் ஜெகதீசன், ஆசான பூதூர் சுகுமார், பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார் ,மீஞ்சூர் பேரூர் மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ்உதயன், பொன்னேரி தாசில்தார் மதிவாணன், உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

























