நன்னிலம், மார்ச். 04 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் நாகராஜ்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள திருப்பள்ளி முக்கூடல் பகுதியை சேர்ந்தவர்கள் சேகர். விஜயபாரதி தம்பதியினர். இந்நிலையில் விஜயபாரதி, தனது மூத்த மகள் புவனா மற்றும் மருமகன் ரித்தீஷ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். விஜயபாரதியின் இரண்டாவது மகள் கல்பனா சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் வீட்டில் தினந்தோறும், ரித்தீஸுக்கும் புவனாவிற்கும் அடிக்கடி கணவன் மனைவி தகராறு ஏற்பட்டுள்ளது.. அதுப்போன்று கடந்த வாரம் கணவன் மனைவிக்கு இடையே தகராறு  ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களை சமாதானம் செய்த  விஜயபாரதியை, ரித்தீஷ் தாக்கியுள்ளதாக தெரிகிறது.

அதில் விஜயபாரதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் விஜயபாரதியை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

கடந்த வாரம் இதுகுறித்து விஜயபாரதியின் இரண்டாவது மகள் கல்பனா, நன்னிலம்  காவல் நிலையத்தில் ரித்தீஷ் மீது புகார்  கொடுத்துள்ளார்.

நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ரித்தீஷை தேடி வந்த நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி   மருத்துவமனையில் சில நாட்களாக விஜய பாரதி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நன்னிலம் காவல்துறையினர் தற்பொழுது ரித்தீஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்பொழுது தலைமறைவாக இருக்கும் ரித்தீஷை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அந்த பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here