கும்பகோணம், ஏப். 22 –

கும்பகோணத்தில் திமுகவின் 15 வது பொதுத்தேர்தல் ஏப்ரல் 22 தேதி முதல் 28 தேதி வரை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு 3 தாலுகாவிற்கு உட்பட்ட மாநகராட்சி, பேரூர் வார்டு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளுக்கு ஏப்ரல் 29,30, மே 1ம் தேதி வரை  நடைபெற உள்ளது. அது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மகாலில் மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இந்த  ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், மற்றும் மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்து மாணிக்கம் சிறப்புரையற்றினார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மாவட்டத் துணைச் செயலாளர் ஐயாராசு பாபநாசம் ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன் நாசர் திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர்கள் கோ க அண்ணாதுரை கூகுர் அம்பிகாபதி அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், குமார், கும்பகோணம் ஒன்றிய செயலாளர்கள் அசோக் குமார் கணேசன் பாஸ்கர் மாநகர செயலாளர் சு.ப தமிழழகன் திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு உள்ளிட்ட பேரூர் கழக செயலாளர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மகளிர் அணி பொறுப்பாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த தேர்தல் வார்டுகள் அடிப்படையில் நடைபெற உள்ளது. வட்ட திமுக உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஒரு அவைத் தலைவர், ஒரு செயலாளர், துணைச் செயலாளர்கள் மூவர், ஒரு பொருளாளர் மற்றும் மேலமைப்பிற்கு ஐந்து பிரதிநிதிகள், 10 செயற்குழு உறுப்பினர்கள் என ஆகமொத்தம் 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

மாவட்டக் கழகம் அறிவிக்கும் இடங்களில், வேட்புமனு விண்ணப்பத் தாள் ஒன்றுக்கு ரூ.25 வீதம் செலுத்தி பெற்றுக் கொண்டு, பூர்த்தி செய்து, அவ் வேட்புமனுக்களை விண்ணப்பக் கட்டணத்துடன், தலைமைக் கழக பிரதிநிதிகளிடம் தாக்கல் செய்து ரசீது பெற்றுக் கொள்ளவேண்டும்.

வட்டக்கிளையில் அவைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் மூவர், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகள் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர் திமுகவில் கடந்த 14வது கட்சியின் அமைப்புதேர்தலின் போது, உறுப்பினராக பதிவு செய்திருத்தல் வேண்டும்.

மேலும், அவர்கள் தற்போது சம்பந்தப்பட்ட வட்டக்கிளையின் உறுப்பினராய் இருத்தல் வேண்டும். வட்டக்கிளையின் செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிடுவோர் சென்ற 14 ஆவது தேர்தலில் உறுப்பினராய் இருக்க வேண்டுமென்பதில்லை. எனவும், நடைமுறை கால உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள் மூன்று பேர் மேலமைப்பு பிரதிநிதிகள் ஐந்து பேர் ஆகிய பொறுப்புக்கள். பொறுப்பு ஒன்றுக்கு ஒவ்வொரு வேட்புமனுக் கட்டணம் ரூ.500, செயற்குழு உறுப்பினர் பொறுப்பு ஒன்றுக்கு வேட்புமனுக் கட்டணம் ரூ.100, செலுத்த வேண்டும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here