தஞ்சாவூர், மார்ச். 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகர் மேம்பாலம் அருகில் உள்ளது அரசு காது கேளாதோர் பள்ளி மற்றும் பார்வை திறன் குறைபாடு உடையோர் பள்ளி செயல்பட்டு வருகிறது.மேலும் அப்பள்ளியில் 320 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் காது கேளாதோர் பள்ளியில் கல்விப் பயிலும் மாணவர் ஒருவர் ஜோதி எனும் தனியார் அறக்கட்டளை நிர்வாகியின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.

அதில், அண்ணா நான் மேம்பாலம் ஸ்கூல்ல படிக்கிறேன். எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடனும்னு ரொம்ப நாள் ஆசை, யாரும் வாங்கி கொடுக்கல எனக்கும் என் பிரண்டுக்கும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பிங்களா அண்ணா என அக் குறுஞ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதனை படித்த அவர், பள்ளிக்கு நேரடியாக சென்று பள்ளி நிர்வாகத்திடம் தனக்கு வந்த மெசேஜ் குறித்து கூறி பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஐஸ்கிரீம் வாங்கி தரலாம்னு தனது ஆசையை வெளிப் படுத்திவுள்ளார்.

அவரின் நோக்கத்தை ஏற்றுக் கொண்ட பள்ளி நிர்வாகம் மதிய உணவு இடைவேளையின் போது அனைவருக்கும் ஐஸ்கிரீம் கொடுத்திட முடிவு செய்யப்பட்டது. அதன் மடி அக்குரலெழுப்பிய மாணவனின் ஆசையோடு அப்பள்ளியில் கல்விப் பயிலும் 320 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களோடு பள்ளிப் பாதுகாவலர்கள் பெற்றோர் ஆசிரியர் என அனைவரின் உள்ளங்களையும் குளிர செய்தார்கள் ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார். பள்ளிக் குழந்தைகளின் உள்ளங்களை போல் அவர்களும் மனநிறைவுக் கொண்டு விடைப்பெற்று சென்றனர். அந் நிகழ்வினால் அப் பிள்ளைகளின் உளம் போல் முகமும் மகிழ்ச்சியில் மலரக்கண்டோம்.

 

நல்வுள்ளங்கள் இருக்கும் வரை இவ்வுலகம் இயக்கத்தை நிறுத்திவிடாது …

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here