மயிலாடுதுறை, பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 311- இல் கூறியவாறு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இரண்டாண்டு காலம் கடந்தப் பின்னும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் காற்றில் பறக்க விட்டதை உணர்த்தும் விதமாக இடைநிலை பதிவு மூப்பு இயக்க ஆசிரியர்கள்; மயிலாடுதுறை தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு 311 என எழுதப்பட்ட பலூனை காற்றில் பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் தலைமையில் நடைபெற்ற இதில் 50 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு திமுக தேர்தல் வாக்குறுதி 311-இல் கூறியவாறு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தியும், மேலும் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை கைது செய்வதைக் கண்டித்தும், விரைவாக சம ஊதியம் வழங்க வலியுறுத்தியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக தனது தனது தேர்தல் வாக்குறுதி 311 ஐ காற்றில் பறக்க விட்டதை உணர்த்தும் விதமாக 311 என எழுதப்பட்ட பலூனை ஆசிரியர்கள் பறக்கவிட்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.