நன்னிலம், பிப். 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள தென்குடி கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இந்த கோவிலில் வழிபட்டால் திருமண தடை நீங்கும் மற்றும் தீராத நோயினால் பாதிக்கப்பட்டால் இந்த கோவிலுக்கு வந்து வேப்பிலை  மாலை கட்டி மாரியம்மன் சாமிக்கு செலுத்தினால் தீராத நோய் விலகும் என்பது ஐதீகம்.

இவ்வாறு சிறப்புமிக்க மகா மாரியம்மன் கோவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழாவிற்கான கோவில் புரணமைக்கும் பணி நடைபெற்று கடந்த வாரம் முடிவுற்ற நிலையில்….

கடந்த 24-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜை துவங்கி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டு கால யாக பூஜை இன்று காலையுடன்  முடிவடைந்த நிலையில்… மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.       அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாலத்துடன் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தை சென்றடைந்து கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

மேலும் கும்பாபிஷேகம் நடைபெறும் போது கருடபகவான் கோவிலை சுற்றி வலம் வந்தது.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து  தீபாராதனை நடைபெற்றது.

இதனை பக்தர்கள் வணங்கி தரிசித்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் அனைவருக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here