காஞ்சிபுரம், பிப். 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட காஞ்சிபுரம் இரண்டாவது புத்தக காட்டி நேற்று நிறைவடைந்தது.

மேலும் கடந்த 11 தினங்களாக நடைப்பெற்ற அவ்விரண்டாமாண்டு புத்தக கண்காட்சிக்கு, காஞ்சிபுரம் மற்றும் மாவட்டத்தை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பள்ளிக் கல்லூரி மாணாக்கர்கள் புத்தக வாசிப்பு பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என் சுமார் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்து பயன் பெற்றுள்ளனர்.

மேலும் அப்புத்தக கண்காட்சியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு 11 நாட்கள் நடந்த புத்தகத் திருவிழா நேற்று நிறைவடைந்தது. மேலும், இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் 11 நாட்களில் மூன்று லட்சம் பேர் பங்கேற்றவர்கள் ரூ. 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்த அளவே புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளதாக புத்தக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here