மீஞ்சூர், பிப். 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையலுக்கு பயன் படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்றபட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள இரண்டுக் குடிசைகள் தீ க்கு இரையானது.

அவ் விபத்துக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்களுக்கு நிதி உதவி வழங்கினார்,காட்டூர் கிராமம் அய்யனார் கோவில் தெரு பகுதியில் கணவனை இழந்த நிலையில் அங்கு வசித்து வருபவர் ருக்மணி (60) என்பவர். மேலும் அவர் தனது இரண்டு பெண்களுடன் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை ஒன்பது மணி அளவில் சுடுதண்ணீருக்காக சமையல் எரிவாயுவை பற்ற வைத்துள்ளார், அப்போது திடீரென சமையல் சிலிண்டர் வெடித்ததில் குடிசை வீடு எரிந்து சாம்பலானது.

மேலும் விபத்தின் போது ருக்மணியின் வீட்டிலிருந்து தீப்பொறி அருகில் உள்ள பார்த்திபன் என்பவர் வீட்டின் மீது விழுந்து அந்த வீடும் தீபற்றி எரிந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் இருந்து உயிர் தப்பிய ருக்மணி வீதியில் வந்து கூச்சலிட்டத்தின் பேரில் கிராமத்தினர் தீயை அணைத்தனர்,

இந்நிலையில் அவ்விபத்தை கேள்விப்பட்ட பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, வீடுகளை இழந்து நிற்கும் முதியவர் ருக்மணிக்கு மாற்று உடை மற்றும் உதவித்தொகை வழங்கினார்,

அந்நிகழ்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன், துணைத் தலைவர் சண்முகம், வார்டு உறுப்பினர் தியாகராஜன்,திமுக ஒன்றிய செயலாளர் ஜெகதீசன்,காங்கிரஸ் நிர்வாகிகள் ஜலேந்திரன், அத்திப்பட்டு புருஷோத்தமன், பழவை ஜெயசீலன், அரவிந்தன், வினோத், சிவகுமார், அன்பரசு, ஜெய்சங்கர், உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here