கும்பகோணம், டிச. 01 –
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் சர்க்கரை ஆலை நிர்வாகிகளின் செயல்பாடுகளைக் கண்டித்தும், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருமண்டங்குடி திரு ஆருரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் சங்க செயலாளர் நாக முருகேசன் தலைமையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தை காவேரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் முருகன் தொடங்கி வைத்தார். இதில் விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய 300 கோடி ரூபாய் கடன் முழுவதையும் தீர்த்து வைத்து விடுவிக்க வேண்டும். பயிர் கடன் தொகை முழுவதும் வங்கியில் செலுத்திட வேண்டும். வட்டியுடன் மத்திய மாநில அரசுகள் அறிவித்த கரும்பிற்கான முழு தொகையும் அரசு வழங்கிட வேண்டும். வெட்டுக் கூலி வாகன வாடகை முழுவதையும் வழங்க வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திரு ஆரூரான் சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், கோட்டாட்சியர் பூர்ணிமா, பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி ஆகியோர் தலைமையில், விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வட்டாட்சியர் பூங்கொடி மற்றும் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேட்டி..
தங்க காசிநாதன்,
மாநில செயலாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்..





















