திருப்பூர், பிப். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மயில்மணி

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் தேனீர் விடுதிகளில் செய்யப்படும் உணவுப் பண்டங்களான பஜ்ஜி மற்றும் சிக்கன் பக்கோடா உள்ளிட்ட பல்வேறு உணவுப் பண்டங்களை சுட சுடவும் மேலும் அதிகப் படியான எண்ணெய் நிறைந்த அவ்வுணவுகளை பொதுமக்களுக்கு அச்சிடப்பட்ட காகிதங்களில் வைத்துக் கொடுக்கின்றனர்.

மேலும் அதன் விளைவாக தாலேட் என்ற வேதிப் பொருள் கனிம எண்ணெய்களும் அச்சிட்ட காகிதத்தில் பொட்டல மிடப்படும் போது அது அக்கடைக்காரர்கள் வழங்கிடும் உணவில் கலப்பதால் அஜீரண கோளாறு ஏற்படுகிறது. அதனால் வயிற்றுப்போக்கு வாந்தி போன்ற உடல் உபாதைகளும், மேலும் நோய் எதிர்ப்பு சக்தி இழந்து புற்றுநோய் உள்ளிட்ட நோய் தாக்கும் ஆபத்தும் உள்ளதாக தெரிய வருகிறது.

அதனால் நகர மற்றும் மாவட்ட சுகாதாரதுறை அலுவலர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களும் உடனடியாக அச்செயல்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், ஏற்கனவே தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவை மீறி இன்னமும் பழைய அச்சிடப்பட்ட பேப்பரில் பஜ்ஜி, போண்டா போன்ற உணவுப்பொருட்களை டீக்கடை, உணவகங்களில் பார்சலுக்காக பயன் படுத்தி வருகின்றனர் எனவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் அப்பிரச்சினைக் குறித்து விழிப்புணர்வு இல்லாத கடை உரிமையாளர்களுக்கு அறிவுத்தலை ஏற்படுத்திட வேண்டும். என்பது எல்லோருடைய கோரிக்கையுமாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here